கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-07-02 17:24 GMT

திண்டுக்கல்லில், பழனி பைபாஸ் சாலையில் முத்தனம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்