பழனியை அடுத்த மானூர் தெற்கு தெருவில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வழிந்தோடாமல் கால்வாயில் இருந்து வெளியேறி தெருவில் தேங்குகிறது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்