நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவாலா பகுதியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இங்கு தினமும் மாணவ-மாணவிகள் உள்பட பலரும் வந்து செல்கின்றனர். இந்த நிழற்குடை அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் மேல் மூடி இ்ல்லை. இதன் காரணமாக ஆபத்தை விளைவிக்கும் வகையில் கழிவுநீர் கால்வாய் திறந்து கிடக்கிறது. அதில் பயணிகள் தவறி விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். மேலும் துர்நாற்றமும் வீசி வருகிறது. எனவே அந்த கழிவுநீர் கால்வாயில் மேல் மூடி அமைக்க வேண்டும்.