திருவள்ளூர் மாவட்டம், மணலி சின்னச்சேக்காடு, பவானி அம்மன் கோவில் எதிரில் மழைநீர் கால்வாய் பணி பல மாதங்களாகியும் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாலைக்கு மிக அருகில் இந்த கால்வாய் இருப்பதால் விபத்து ஏற்படுகிறது. எனவே, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீர் கால்வாய் பணியை முடிக்க வேண்டும்.