ராமநாதபுரம் மாவட்டம் மங்கலக்குடியில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்ந்து போய் கழிவுநீர் செல்ல முடியாத நிலையில் உள்ளது.மேலும் கழிவுநீர் ஒரே இடத்தில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உருவாகி நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.