பூதப்பாண்டி சாய்பாபா கோவில் தெருவில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஓடைகள் முறையாக தூர்வாரி பராமரிப்பது இல்லை. இதனால், ஓடையில் குப்பைகள், கழிவுகள் அதிகளவில் தேங்கி உள்ளது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையில் கழிவுகளை அகற்றி தூர்வாரி பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாராயணசாமி, பூதப்பாண்டி.