சுத்திகரிப்பு எந்திரம் பழுதால் கழிவுநீர் தொட்டியில் துர்நாற்றம் வீசும் அவலம்

Update: 2022-07-23 12:19 GMT
விழுப்புரம் மருதூர் சந்தானகோபாலபுரம் பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் எந்திரம் பழுதாகி பல மாதங்கள் ஆவதால் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமலும், காகுப்பத்தில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவுநீர் கொண்டு செல்லப்படாமலும் மருதூர் சந்தானகோபாலபுரம் தொட்டியிலேயே கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.......

மேலும் செய்திகள்