பண்ருட்டியிலிருந்து கும்பகோணம் மற்றும் கடலூர் செல்லும் சாலையின் ஓரங்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் சிலர் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டி வருவதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகரிகள் முன்வந்து கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.