பண்ருட்டி நகராட்சி பி.டி.எஸ். மணிநகர் 6-வது வார்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கும் பணியின் போது கழிவுநீர் கால்வாய் சேதமடைந்தது. இருப்பினும் தற்போது வரை அங்கு புதிதாக கால்வாய் கட்டப்படாமல் உள்ளதால், கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.