கூடலூர் உழவர் சந்தைக்குள் கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் தூர்நாற்றம் வீசுகிறது. இதன் அருகே உள்ள அம்மா உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கிறது. இதன் காரணமாக அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.