ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட தின்னூர் லட்சுமி நரசிம்ம நகர், அம்மன் நகர் செல்லும் சாலையில் சாக்கடை கால்வாய் இல்லை. இதனால் கழிவுநீர் சாலையில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. எனவே சாக்கடை கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.