விழுப்புரம் வண்டிமேட்டில் உள்ள ஜெயலட்சுமி நகரில் பாதாள சாக்கடை நிரம்பி, கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு பலவித தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.