சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-05-07 17:16 GMT

கிருஷ்ணகிரி நகரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 5 ரோடு ரவுண்டானா அருகில் மழை நீர் செல்ல வழியில்லாமல் சாலைகளில் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே 5 ரோடு ரவுண்டானா பகுதியிலும், சென்னை சாலையிலும் மழை நீர் தேங்காமல் செல்லும் வகையில் கால்வாய்களை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்