திண்டுக்கல் சாலை ரோட்டில் இருந்து திருவள்ளுவர் சாலைக்கு செல்லும் குறுக்கு தெருவில் தனியார் வங்கி அருகே பெரிய பள்ளம் உருவாகி விட்டது. இந்த பள்ளத்தில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக வாகனங்கள் செல்லும் போது கழிவுநீர் பிறர் மீது தெறிப்பதோடு, துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாலை பள்ளத்தை சரிசெய்து, கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.