கூடலூரில் உள்ள ராஜகோபாலபுரம் பகுதியில் இருந்து நடுக்கூடலூர் செல்லும் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த வழியாக நடந்து செல்லும் சிறுவர்கள், முதியவர்கள் உள்பட பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க வேண்டும்.