கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2023-04-30 18:01 GMT
திருவெண்ணெய்நல்லூர் தாலுகா ஆமூர் மேற்கு தெருவில் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதோடு, சுகாதார பணிகள் மேற்கொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்