கூடலூரில் பெட்ரோல் நிலையம் உள்ள பகுதியில் சாலையோரம் மூடப்பட்ட கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் தேங்கி காணப்படுகிறது. மேலும் சில சமயங்களில் கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கால்வாயை தூர்வாரி கழிவுநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.