காணை ஒன்றியம் சிருவாக்கூர் பகுதியில் கால்வாய் அமைக்கப்படாததால், கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.