திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கன்னிகபுரம் காந்தி தெருவில் கழிவுநீர் கால்வாய் சுவரானது இடிந்து விழுந்து பல நாட்களாகியும் இதுவரை சரி செய்யப்படவில்லை. வெறும் மண் மூட்டைகளை வைத்து அடைத்து வைத்துள்ளனர். அருகே மேல்நிலைப்பள்ளி இருப்பதால் தினமும் பெரும்பாலான பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு இந்த தெருவை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. விபரீதம் எதுவும் விளையும் முன்னர் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து கால்வாய் சுவரை சீரமைத்து தர வேண்டும்.