மசினகுடியில் இருந்து சிங்காரா செல்லும் சாலையோரம் உள்ள வாய்க்காலில் குப்பைகள் பல இடங்களில் குவிந்து கிடப்பதால் கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் கொசு தொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கழிவுநீர் வாய்க்கால்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.