திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீா் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால், வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.