கம்பத்தில், காமயகவுண்டன்பட்டி செல்லும் சாலையில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் கழிவுநீர் தேங்குவதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்து வருகிறது. எனவே சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.