உடைந்து கிடக்கும் கால்வாய் மூடி

Update: 2023-03-19 09:39 GMT

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையோரம் பழைய பிணவறை அருகில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதைக்கு அடியில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. அந்த கால்வாய்க்கு அமைக்கப்பட்ட மேல் மூடி உடைந்து திறந்து காணப்படுகிறது. இதனால் அதன் மீது நடந்து செல்லும் பொதுமக்கள் கால்வாய்க்குள் தவறி விழும் அபாயம் நிலவுகிறது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு அந்த கால்வாய் மூடியை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்