கம்பம் கோசந்திர ஓடை பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.