சாக்கடை பள்ளம் மூடப்படுமா?

Update: 2023-02-05 15:41 GMT

நாகை நேதாஜி சாலை அருகே உள்ள மேம்பாலத்தின் வடக்கு பகுதியில் 2 சாக்கடை பள்ளங்கள் திறந்த நிலையில் உள்ளன. இதனை அறியாமல் இரவு நேரங்களில் சாலையில் செல்பவர்கள் பள்ளத்துக்குள் தவறி விழுந்து விடுகின்றனர். மேலும், இந்த பள்ளத்தினால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாக்கடை பளத்தினை மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

படம் இல்லை

முத்தையன்


மேலும் செய்திகள்