சாக்கடை கால்வாய் வசதி

Update: 2023-02-01 16:46 GMT

கம்பம் ஒன்றியம் ஆங்கூர்பாளையம் ஊராட்சி மஞ்சள்குளம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு பள்ளி அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. சுகாதாரத்தை காக்கும் வகையில் சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும். 

மேலும் செய்திகள்