பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் கெங்கேரி செல்லும் சாலையில் ஜம்புசவாரி தின்னே அருகே சாலை உள்ளது. அந்த சாலையின் ஓரத்தில் உள்ள கழிவுநீர் வடிகால் உடைந்துள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலை முழுவதும் குளம்போல் தேங்கி கிடக்கிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த கழிவுநீர் வடிகாலை சரிசெய்து கொடுக்க வேண்டும்.