மதுக்கரை பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் சாலையில் கழிவுநீர் செல்லும் நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்ைல. எனவே விரைவாக சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.