ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் இருந்து கோடப்பமந்து பகுதிக்கு செல்லும் கழிவுநீர் கால்வாய் பல இடங்களில் உடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.