சுகாதார சீர்கேடு

Update: 2023-01-25 09:49 GMT

 பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட மார்த்தால் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். ஆனால் இங்கு கழிவறை மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால், குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், அவர்கள் திறந்தவெளியை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குழந்தைகள் நலன்கருதி கழிவறை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேக்அப்துல்காதர், மார்த்தால்.

மேலும் செய்திகள்