ஊட்டி படகு இல்ல சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை காணப்படுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.