திருச்சி மாநகராட்சி சாந்தி நகர் பகுதியில் சுமார் 125 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளதால், சாலை ஓரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் கழிவுநீர் சென்று தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் முறையான வாய்க்கால் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.