தேனி ரெயில் நிலையம் செல்லும் வழியில் மீறுசமுத்திரம் கண்மாயில் இருந்து கொட்டக்குடி ஆற்றுக்கு செல்லும் வாய்க்கால் பாலம் உள்ளது. இந்த வாய்க்காலில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து மழைநீர் செல்ல முடியாத அளவுக்கு உள்ளது. அங்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த குப்பைகளை அப்புறப்படுத்த வாய்க்காலை தூர்வார வேண்டும்.