பழனியை அடுத்த கீரனூர் பேரூராட்சி 3-வது வார்டில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.