விழுப்புரம் நந்தனார் தெருவில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் தெருவில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு பலவித நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.