பந்தலூர் அருகே உப்பட்டி பஜாரில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. ஆனால் பல இடங்களில் மேல் மூடி இல்லாமல் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து வரும் குழந்தைகள், முதியவர்கள் உள்பட பொதுமக்கள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே கழிவுநீர் கால்வாய்க்கு மூடி அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.