விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட கேசவ நாயக்கன் தெருவில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அவ்வழியாக செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பாா்களா?