மதுரை மாநகராட்சி பனகல் சாலையில் இளங்கோ மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி எதிரில் இந்திய மருத்துவ கழகம்-பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் கழிவுநீர் செல்லும் கால்வாயானது தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் கழிவுநீர் கால்வாயானது மூடப்படாமல் திறந்த நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியின் சுகாதாரம் கேள்விக்குறியில் உள்ளது. திறந்த நிலையில் உள்ள கால்வாயில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி மூட வேண்டும்.