விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றியம் வெள்ளையாம்பட்டு கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் மழைநீர், கழிவுநீருடன் கலந்து சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்கள் வீடுகளில் இருக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஆகவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.