தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடுக்கரை பஞ்சாயத்தில் மேலத்தெரு பகுதியில் கழிவுநீர் ஓடையின் மேல் பகுதியில் சிமெண்ட் சிலாப் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த சிலாப் உடைந்து துளை ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என பலதரப்பட்ட மக்கள் செல்கிறார்கள். சிலாப்பில் ஏற்பட்டுள்ள துளை பெரிதாகி பேராபத்து ஏற்படும் முன்பு அதை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.