மதுரை மாநகர் 24-வது வார்டு லெனின் தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு உள்ளது. மேலும் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.