பெங்களூரு மகாதேவபுரா பகுதியில் ஐ.டி.பி.எல். கேட் அருகே உள்ள சாலையை வாகன ஓட்டிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த சாலையின் ஓரத்தில் சாக்கடை கால்வாய் உள்ளது. தற்போது அதன்மேல் போடப்பட்டிருந்த சிலாப்புகள் உடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த சாக்கடை கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இதன்காரணமாக அங்கு பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு அதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.