ஆண்டிப்பட்டி தாலுகா ஜக்கம்பட்டி 12-வது வார்டு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் குப்பைகளும் கொட்டப்படுகிறது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.