கரூர் மாவட்டம் கடவூர் வட்டம், பாலவிடுதி போலீஸ் நிலையம் பின்புறம் புதிய கழிப்பறை கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு பாதியிலேயே நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அப்பகுதி திறந்த வெளி கழிப்பிடமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கழிவறை விரைந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.