விளாத்திகுளம் அருகே சூரங்குடி பெருமாள் கோவிலுக்கு செல்லும் பாதையில் உள்ள வாறுகால் பாலம் சேதமடைந்து துவாரம் விழுந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே, சேதமடைந்த வாறுகால் பாலத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.