பொது கழிவறை வசதி ஏற்படுத்தப்படுமா?

Update: 2022-07-17 10:41 GMT
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பேரூராட்சிக்கு வெளியூரில் இருந்து தினமும் பல்வேறு வேலைகளுக்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதேபோல் வலங்கைமானை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இருந்து பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள் வலங்கைமானுக்கு வந்து செல்கின்றனர். ஆனால் வலங்கைமான் பேரூராட்சியில் பொது கழிவறை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் பொதுகழிவறை வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.

மேலும் செய்திகள்