திருச்சி கூனிபஜார் மற்றும் சவேரியார் கோவில் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலை ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கழிவுநீர் வாய்க்காலை தூர்வாராமல் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி கடந்த சில நாட்களாக தேங்கி நிற்கின்றன. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.