மதுரை ஜீவா நகர் தென்றல் நகர் 78வது வார்டில் மழைக்காலத்தில் பாதாள சாக்கடை மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி குடியிருப்பை சூழ்ந்து விடுகிறது. இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி இப்பகுதியில் தொற்றுநோய் பரவ வழிவகுக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள வாருகால்களை தூர்வாரி கழிவுநீர் தேங்காத வகையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.