மதுரை மாவட்டம் சிம்மக்கல் தாசில்தார் பள்ளிவாசல் தெருவில் கழிவுநீர் கால்வாய் நிரம்பி செல்ல வழியில்லாமல் சாலையிலும் வீடுகளின் முன்பும் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர மிகவும் சிரமப்படுகின்றர். மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் தேங்காமல் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.