விழுப்புரம் கே.கே. நகர் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து குளம் போல் தேங்கிறது. இதனால் சுகாதா சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதோடு கொசு தொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்துவதோடு, வடிகால் வசதியும் செய்து தர வேண்டும்.